பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக திகழ்வது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. ஏற்கனவே 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசனை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவில் காரணமாக இந்த ஆண்டும் அக்டோபரில் தொடங்க திட்டமிட்டமுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி கமலே இந்த வருடமும் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.
இன்னும் ஒரு மாதமே நடுவில் இருப்பதால் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதுடன், போட்டியாளர்களின் தேர்வும் வேகமாக நைடபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த 5-வது சீசனில் புதுவிதமான டாஸ்க்குகளை கொடுக்க பிக்பாஸ் தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாகவும், தொலைக்காட்சி பிரபலங்கள் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் இதில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணையையும் செலுத்தியாக வேண்டும் என்று நிபத்தனை விதித்துள்ளனர்.
தற்போது சில புகைப்படங்களும் இணையத்தில் லீக்காகி உள்ள நிலையில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை அளித்துள்ளது.