தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பகாலத்தில் இருந்தே உழைப்பால் இந்த இடத்திற்கு வந்தவர் அஜித்குமார். இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படம் முதலில் அஜித் தான் நடிக்க இருந்தது என அனைவருக்கும் தெரிந்தவொன்று.
ஆனால், அஜித் வேண்டாம் என்று கூற பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் காரணத்தை கூறினார். அஜித்தை மிரட்டினாரா? எதற்கு படத்தில் நடிக்கவில்லை என்று கேட்டதற்கு, பாலா அஜித்திடம் பல்கா கால்ஷீட் கேட்டதாகவும், முடி அதிகமாக வளர்க்க வேண்டும்.
பாலா ஒரு நாத்தீகவாதி, அஜித் ஒரு ஆன்மீகவாதி என்பதால் அக்கதை பிடிக்காமல் இருந்ததாகவும், முழுவதுமாக பாலா அஜித்திடம் கதையை கூறவில்லையாம். கதையை அடிக்கடி மாற்றுபவர் பாலா அவர் ஒரு மதுரைக்காரர், அஜித்தை மிரட்ட காரணம், அட்வான்ஸ் வாங்கியதாலும், நடிக்கமாட்ட என்று ஒரு சண்டை இருந்திருக்கலாம் என்றும் அஜித் பற்றிய சர்ச்சை ஓப்பன் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.