ரஷ்யாவில் தனது பிறந்தநாளை இரவு விடுதி ஒன்றில் நடனமாடிக் கொண்டாடிக்கொண்டிருந்தார் ஒரு இளம்பெண்.
Surgut என்ற நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில், Tatiana Pokhorenko (35) என்னும் பெண் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மேலே தொங்கிக்கொண்டிருந்த ஆறு தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்த உலோகச் சட்டம் ஒன்று அறுந்து அவர் மீது விழுந்தது.
25 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த, 200 கிலோ எடையுள்ள அந்த உலோகச் சட்டம் அவர் மீது விழுந்ததில், Tatiana சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இந்த கோர சம்பவம் அங்கிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. நடனமாடிக் கொண்டிருந்த Tatiana, கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போகும் பயங்கரக் காட்சியை அந்த வீடியோவில் காணமுடிகிறது.
அந்த இரவு விடுதியின் உரிமையாளர் மீது கவனக்குறைவு காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாலும், இறந்தவரின் குடும்பத்துக்கு உதவ ஒப்புக்கொண்டுள்ளதாலும், அவருக்கு சிறு பிள்ளைகள் இருப்பதாலும், இப்போதைக்கு அவர் சிறை செல்ல வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.