பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இன்று அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்கள் சிலவற்றை நீதிமன்றத்தில் தெரிவித்தார் கொலையாளியாகிய பொலிசார் ஒருவர்.
லண்டனில் வாழ்ந்துவந்த Sarah Everard (33) மார்ச் மாதம் 3ஆம் திகதி, தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது திடீரென மாயமானார்.
பொலிசார் பெரிய அளவில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட நிலையிலும், ஒரு வாரத்துக்குப்பின், கென்டிலுள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் சடலமாகத்தான் கண்டெடுக்கப்பட்டார் அவர்.
CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் பிரித்தானிய பொலிசாராக பணியாற்றி வந்த Wayne Couzens என்பவர் மீது சந்தேகம் ஏற்பட, அவரை பின்தொடர ஆரம்பித்தனர் விசாரணை அதிகாரிகள்.
பின்னர், Wayneதான் Sarahவைக் கொன்றார் என்பது உறுதி செய்யப்பட்ட, அவர் கைது செய்யப்பட்டார்.
முதலில் பல்வேறு கதைகளைக் கூறிய Wayne, பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற Wayne, தான் Sarahவைக் கடத்தியதாகவும், வன்புணர்வு செய்ததாகவும், கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதில் கொடூரம் என்னவென்றால், இன்று அந்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் Sarahவின் தந்தையும் சகோதரியும் Sarah கொல்லப்பட்ட விதம் குறித்த வாக்குமூலத்தைக் கேட்டுக்கொண்டிருந்ததுதான்!