மேஷம்
மேஷம்: குடும்பத்தில் மனம் விட்டுபேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். வராது என்றிருந்தபணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம்
கடகம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்றுகிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள் .
கன்னி
கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சி
யால் முன்னேறும் நாள்.
துலாம்
துலாம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டிஇருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
தனுசு
தனுசு: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயம் அடையும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தாரின் சுபநிகழ்ச்சிகளின் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது பொருள் வந்துசேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகுறையும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
மீனம்
மீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதுவேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வரக்கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.