சுவிட்சர்லாந்து – சூரிச் மாநிலத்தில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
50 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எனவும் இவருக்கு 20 வயதுக்கு மேற்பட்ட இரு பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு இது பெரிய சோக நிகழ்வாக பதிவாகியிருக்கின்றது.