தமிழ் சினிமா கொண்டாடும் காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.
ஒருகாலத்தில் சந்தானம் எப்படி எல்லா படங்களிலும் வந்தாரோ அதேபோல் இப்போது எந்த புதிய படம் எடுத்தாலும் யோகி பாபு இருக்கிறார். அந்த அளவிற்கு இப்போது அவரது மார்க்கெட் உள்ளது.
யோகி பாபுவிற்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சிம்பிளாக மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் சிம்பிளாக நடத்திய அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரபலங்களை வைத்து சிறப்பாக நடத்த திட்டமிட்டார்.
ஆனால் அதுவும் கொரோனா காரணமாக நின்றுவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் யோகி பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது உடன் அவரது மகனும் உள்ளார்.




















