விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
வீட்டை முழுவதும் கவனித்துக்கொள்ளும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி சீரியல் கதை நகர்கிறது. இடையில் கதாநாயகனின் முன்னாள் காதலி டிராக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.
கோபி கதாபாத்திரத்தின் முன்னாள் காதலியாக நடித்து வந்தவர் ஜெனிபர், அவர் அண்மையில் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். காரணம் அடுத்தடுத்து அவரது கதாபாத்திரம் வில்லி வேடத்திற்கு மாறுகிறதாம்.
வில்லியாக நடித்து தனது இமேஜை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை எனவே பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறினேன் என அவரே அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



















