கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள், தொற்று குணமாகி இருவாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதே பயனுடையதாக அமையுமென பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தொற்றுக்கு உள்ளானவர், தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள், வெளிநாட்டிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் என அனைவருக்கும் தனிமைப்படுத்தல் செயற்பாடு வித்தியாசப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.