கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் 14 நாட்கள் முள்ளியவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.