ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுகத்திற்கு வந்திருந்த வணிகக் கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் போது கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலின் பெரிய பரப்பளவில் எண்ணெய் கசிவை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கசிந்த எண்ணெயை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை போர்ட் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரவி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீவிபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தை தொடர்ந்து 170க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 4 திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.