தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.
மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள மரைக்காயர் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 60 கோடி முதல் 75 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் பேசப்படுவது இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.