சினிமாவில் நடிகைகள் பலர் கொடிக்கட்டி பறந்த பிறகு சில காரணங்களால் தூக்கி எறிந்தும் ஒதுங்கியும் விடுவார்கள். அந்தவரிசையில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அதில் பிரபலமான நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வலம் வந்தவர் தேவயானி.
அந்த காலகட்டத்தில் ரசிகர் பட்டாளம் ஏராளம். சினிமாவில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் அனைத்து தாய்மார்கள் மனதிலும் இடம் பிடித்தவர். அப்படிப்பட்ட தேவயானி ஏன் ரஜினியுடன் கடந்த 27 வருடமாக நடிக்கவில்லை என்ற காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியுடன் நடிப்பதற்கு தகுந்த கதாபாத்திரங்கள் கொண்ட கதை தனக்கு அமையவில்லை என கூறியுள்ளார். மேலும் ரஜினியின் பட கதைக்கு தான் தேவைப்படவில்லை போல எனவும் தன்னுடைய வருத்தத்தை பதிவுசெய்துள்ளார். இருந்தாலும் வருங்காலத்திலும் ரஜினியுடன் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தேவயானி.
தேவயானி தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நடிகர் நகுலின் கூடப்பிறந்த சகோதரி தேவயானி என்பது குறிப்பிடத்தக்கது.