பாரதி கண்ணம்மா சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பாரதி-கண்ணம்மா இருவரும் இடம்பெறும் காட்சிகள் வருகின்றன, ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்படுகிறது. அண்மையில் வந்த புரொமோவில் ஹேமாவிற்காக கண்ணம்மா பாரதியுடன் மருத்துவமனை வருகிறார்.
இப்போது புதிதாக வந்துள்ள புரொமோவில், ஹேமாவை பார்த்துக்கொள்ள கண்ணம்மாவை தனது வீட்டிற்கு பாரதி அழைக்கிறார்.
ஆனால் கண்ணம்மா செம கெத்தாக ஹேமாவை எனது வீட்டில் விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார்.
இதனால் கோபமாக பாரதி கண்ணம்மா வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இந்த பரபரப்பான புரொமோவிற்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிகின்றது.



















