நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் நிறைய வெற்றிப்படங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று.
இப்படம் திரையரங்கில் கொரோனா காரணமாக வெளியாகவில்லை, OTT தளத்தில் நேரடியாக வெளியாகி இருந்தது.
அப்படத்தை மட்டும் திரையரங்கில் ரிலீஸ் செய்திருந்தால் படத்தின் வசூல் எங்கேயோ சென்றிருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.
அண்மையில் இப்படத்தை சூர்யா ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாகவும் சுதா கொங்கராவே இயக்க இருக்கிறார் என தகவல் வந்தது.
2டி நிறுவனம் மூலம் சூர்யா தயாரிக்க இருக்கும் இப்படத்தில் ஹிந்தியில் யார் நடிக்கப்போகிறார் என ரசிகர்களிடம் பேசப்பட்டு வந்தது.
தற்போது வரும் தகவல்படி சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க போவதாக கிசுகிசுக்கப்படுகிறது.




















