15 வயதான சிறுமி இஷாலினி மரணம் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளும் வகையில் பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் தலைமையிலான குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் மனைவி தலைமறைவாகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த இஷாலினி தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அந்தப் பெண் ரிசாட்டின் வீட்டில் வைத்து பலவிதமான கொடுமைகளுக்கு உள்ளானதான குற்றச்காட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
இவை காரணமாக ரிசாட்டின் மனைவி கைதுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். அவர் தலைமறைவாகியுள்ளதான செய்தி தற்பொழுது வெளிவந்துள்ளது.
பொலிசார் அவரைத் தேடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.