விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் அமித் பார்கவ்.
இதன்பின் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம்பிடித்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் நடித்திருந்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் திருமதி ஹிட்லர் சீரியல் நடித்து வருகிறார்.
சீரியலை தவிர்த்து, தமிழில் வெளியான மிருதன், குற்றம் 23, சக்ரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அமித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..



















