தமிழ் ரசிகர்களுக்கு உலக அழகி என்றாலே முதலில் நியாபகம் வருவது நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
நடிகர் விவேக் அவர்கள் கூட ஒரு நிகழ்ச்சியில் எத்தனை உலக அழகி வேண்டுமானாலும் வரட்டும், நமக்கு எப்போதுமே உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என கூறியிருப்பார்.
தற்போது ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் பாண்டிச்சேரி வந்துள்ளார்.
ஏனென்றால் அங்கு நடக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா கலந்துகொள்ள வந்துள்ளார். அப்போது நடிகை ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் நடிகர் சரத்குமார் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இப்போது அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நம்ம ஐஸ்வர்யா ராயின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.