வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடந்த மாதம் வெளியானது. சென்னை:
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இதற்கிடையே, இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பாடலான, ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.