வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தல 61’ படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கி இருந்தார்கள். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால், போனிகபூர் – அஜித் – எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தை தற்போது உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படமான ‘தல 61’ பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து போனிகபூர் – அஜித் – எச்.வினோத் ஆகியோர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.