அசாமில் பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தக்க தண்டனையை வழங்கியுள்ளார்.
அசாம் மாவட்டத்தில் உள்ள கவுகாத்தி பகுதியை சேர்ந்தவர் பாவனா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இளைஞர் ஒருவர் அவரை வழிமறைத்து முகவரி கேட்டுள்ளார்.
அப்பொழுது அந்த நபர் பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். இதை எதிர்பார்க்காத அந்த பெண் ஒரு நிமிஷம் எதுவும் புரியாமல் தடுமாறி நின்று விட்டார்.
அந்த நபர் சம்பவ இடத்தை விட்டு பைக்கில் தப்பிக்க நினைக்கும் பொழுது அவரது பைக்கில்ன் பின்னாடி சக்கரத்தை பிடித்து இழுத்து அருகில் இருந்த சாக்கடையில் தள்ளினார்.
இதனால் அந்த இளைஞர் தப்பிக்க முடியாமல் குழிக்குள் சிக்கி கொண்டு தடுமாறினார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மக்கள் கூட்டம் கூடியதால் அனைவரும் அந்த இளைஞரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கூட்டத்தில் இருந்த நபர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பெண்ணின் மன உறுதி, துணிச்சல் போன்றவற்றை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.