ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்காக சிறப்பாக பங்களிப்பை கொடுத்த கேரள வீரர் ஸ்ரீஜஷ் குறித்த நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை அரை இறுதி வரை கொண்டு சென்றதில் கேரளாவை சேர்ந்த கோல்கீப்பர் ஸ்ரீஜஷ் முக்கிய பங்கு வகித்தார்.
கேரள மாநிலம் எருமேலியை சேர்ந்த ஸ்ரீஜஷின் கோல்கீப்பர் பயிற்சிக்கான விளையாட்டு கிட்டை, வாங்க அவரது தந்தையான விவசாயி ரவீந்திரன், குடும்பத்திற்கு வருமானம் தந்து கொண்டிருந்த பசுவை விற்ற நிகழ்வை கூறி நெகிழ்ந்துள்ளார்.
கிராமப்பகுதி என்பதால் ஹாக்கி பயிற்சிக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஜி.வி. ராஜா விளையாட்டுக் கல்லூரியில் சேர்ந்த பிறகு, மகனுக்கு கோல்கீப்பர் கிட் வாங்க வேறு வழியின்றி பசுவை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக அவர் கூறினார்.
அதன்பின்னர் கடின உழைப்பால் ஸ்ரீஜஷ் இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளதையும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.