தென் பிரான்ஸ் அதிகாரிகள், பிரான்சை மிக பயங்கர அபாயம் ஒன்று நெருங்குவதாக எச்சரித்துள்ளார்கள்.
துருக்கி, கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பயங்கரம் விளைவித்த காட்டுத்தீ பிரான்சை நெருங்கி வருவதைக் குறித்தே அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
தெற்கு பிரான்சிலிருக்கும், Var, Alpes-Maritimes மற்றும் Bouches-du-Rhône ஆகிய பகுதிகளிலிருக்கும் மக்கள் காடுகள் பக்கம் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
வறண்ட வானிலை மற்றும் காற்று அதிகம் வீசுவதால் காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதாலேயே அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.