பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை.
குழந்தை பருவத்தில் நிறைய பேர் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி ‘லிப்ஸ்டிக்’ பூசிக்கொண்டது போன்ற மன நிறைவை பெற்றிருப்பார்கள். பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நலம் சேர்க்கக்கூடியவை. உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக்கூடியது.
1. ஒளிரும் சருமத்திற்கு: பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை. அந்த வகையில் பீட்ரூட்டை மட்டுமே பயன்படுத்தி சருமத்தை ஒளிர வைக்கலாம். ஒரு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். பின்பு அந்த விழுதை முகம் முழுவதும் தடவிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மிளிர தொடங்கிவிடும்.
2. சரும பிரகாசத்திற்கு: வைட்டமின் சி, முகத்தில் பிரகாசத்தை பெற்றுத்தரும் மாயாஜால ஊட்டச்சத்து முகவராக அறியப்படுகிறது. பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு இவை இரண்டிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை ஒன்றாக பயன்படுத்தும்போது சருமத்தில் கோலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்க உதவும். சருமத்திற்கு பிரகாசத்தையும் அளிக்க துணைபுரியும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்
உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோலை பொடித்து தயாரித்த தூள் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: அகன்ற கிண்ணத்தில் ஆரஞ்சு தூளை கொட்டி அதில் பீட்ரூட் சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பசை போல் குழைத்த பிறகு அந்த பேஸ்டை முகத்தில் தடவிவிட்டு உலர விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பிரகாசிக்கும்.
4. முகப்பருவுக்கு: பீட்ரூட்-தயிர் இரண்டும் சேர்ந்த கலவை சருமத்தில் புள்ளி புள்ளிகளாக படர்ந்திருக்கும் துளைகளை நீக்க உதவும். முகப்பருவையும் போக்கும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், பீட்ரூட் இரண்டையும் கலந்து மென்மையான பேஸ்ட் தயாரித்துக்கொள்ளவும். அதனை முகம் முழுவதும் தடவி விட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி விடலாம்.