சின்னத்திரையில் தற்போது மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.
இதில் தற்போது, முத்துராசை கொலை செய்தது யார்? என்ற கேள்வி தான், அணைத்து ரசிகர்களின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஒரு புறம் மாயன் இந்த கொலை பழியை ஏற்றுக்கொண்டாலும், போலீஸ் அதிகாரி கார்த்திக் யார் அந்த உண்மையான குற்றவாளி என்று அலசி ஆராய்ந்துகொண்டு இருக்கிறார்.
மற்றொரு புறம் இந்த கொலையை யார் செய்திருப்பார் என்று மாயனும், பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்.
முதலில் இந்த கொலையை காயத்திரி தான் செய்தார் என்று கூறிவந்த நிலையில், தற்போது புதிதாக வரவிருக்கும் மாறன் என்ற கதாபாத்திரம் முத்துராசை கொன்றுள்ளார் என்று கூறுகின்றனர்.
ஆனால் இன்று வெளியாகியுள்ளது ப்ரோமோவிலும், முத்துராசை கொன்றது யார் என்று கூறவில்லை. இந்த வாரம் அதற்கான பதில் கிடைத்துவிடும் என்று ப்ரோமோவில் கூறுகின்றனர்.