மோட்டோரோலா நிறுவனம் விரைவில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் 20, எட்ஜ் 20 லைட் மற்றும் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த மாத இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது எட்ஜ் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டை மோட்டோரோலா உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது.
தற்போதைய டீசர்களின் படி மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கின்றன. எட்ஜ் 20 பியூஷன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் 20 லைட் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆகும். மற்றபடி எட்ஜ் 20 ஸ்மார்ட்போன், சர்வதேச சந்தையில் அறிமுகமான வேரியண்டே இங்கும் அறிமுகமாகும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் மாடல்களில் 6.7 இன்ச் OLED பேனல், FHD+ 1080×2400 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் டிமென்சிட்டி 720 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ்., எட்ஜ் 20 மாடலில் 108 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.