பிரான்ஸ் அரசு, வரும் அக்டோபர் மாத இடைப்பகுதியில் கொரோனா பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்வதை நிறுத்த தீர்மானித்துள்ளது.
பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர், Gabriel Attal இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதை தடுக்கவும், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
அதாவது, மக்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, தங்களுக்கு தொற்று இல்லாததால், தடுப்பூசி செலுத்த தேவையில்லை என கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே தான் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில், பிரான்சில் உள்ள மொத்த மக்கள் தொகை 67 மில்லியனில், பாதிக்கும் அதிகமான நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டது.
இதில் 45 மில்லியன் மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இதனிடையே, அரசு இம்மாத இறுதிக்குள் 50 மில்லியன் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 35 மில்லியன் நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்த முடிவெடுத்துள்ளது.