இயக்குனர் கதிர் இயக்கிய ‘இதயம்’, ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழில் இவர் கடைசியாக இயக்கிய படம் காதல் வைரஸ். 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் படங்களை இயக்கவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குனர் கதிர். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.