ஹாமில்டன் பகுதியில் உள்ள கோர் பூங்காவில் அமைந்துள்ள Sir. John A. Macdonald சிலையை கவிழ்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் பூர்வக்குடி சமூக மக்களின் ஒற்றுமை பேரணி ஒன்று பொதுமக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்க முன்னெடுக்கப்பட்டது.
கோர் பார்க்கில் இருந்து கனடாவின் முதல் பிரதமரின் சிலையை அகற்றுவதற்கு எதிராக நகர சபை வாக்களித்த நிலையில் இந்த ஒற்றுமை பேரணி முன்னெடுக்கப்பட்டது.
நகர சபையின் அந்த முடிவானது தங்கள் சமூகத்தினரை ஆழமாக பாதித்துள்ளது என்றே, பேரணிக்கு முன்னர் பூர்வக்குடி சமூக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கோர் பூங்காவுக்கு சென்ற மக்கள், கனடாவின் முதல் பிரதமரான Sir. John A. Macdonald சிலையை கவிழ்த்து சேதப்படுத்தியுள்ளனர். மட்டுமின்றி குறித்த காட்சிகளை காணொளியாக பதிவு செய்து, சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
மெக்டொனால்டு கனடாவின் உண்டுறை பள்ளி அமைப்பின் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், இதனாலையே பூர்வக்குடி குழந்தைகள் அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது என குற்றஞ்சாட்டப்படுகிறது.
கனடாவின் முதல் பிரதமரின் சிலை கவிழ்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரித்து வருவதாகவும், ஆனால் இதுவரை கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.