தாலிபான்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் அமெரிக்க இராணுவ சரக்கு விமனத்தில் கடும் நெருக்கடியுடன் உட்கார்ந்து சென்ற புகைப்படம் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய நகரான காபூலை நேற்று முன் தினம் தாலிபான்கள் கைப்பற்றியதால், அங்கிருக்கும் மக்கள் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக காபூலை விட்டு வெளியேறி, விமானநிலையத்தில் குவிந்தனர்.
ஏனெனில், தாலிபான்களை பொறுத்தவரை இஸ்லாமிய மத சட்டங்களை மீறுபவர்களை துப்பாக்கியால் ஈவு இரக்கமில்லாமல் சுட்டு கொள்ளுவர்.
இத்தகைய அடக்கு முறைகளுடன் வாழமுடியாத காரணத்தினால், அங்கிருக்கும் மக்கள் அகதிகளாக வேறு நாடுகளை நோக்கி புலம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
அதன் படி காபூல் விமானநிலையத்தில், இருந்த அமெரிக்க இராணுவ சரக்கு விமானத்தில்(C-17 Globemaster III) சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கடும் நெருக்கடியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையி, குறித்த விமானத்தில் இருந்த பயணிகள், குழந்தைகள் உட்பட அனைவரும், காபூலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, கத்தாரில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த விமானத்தில், இந்த அளவிற்கு அதிக அளவில் சுமை கொண்ட எதுவும் கொண்டு செல்லப்பட்டதில்லை, இந்த விமானத்தில் சுமார் 100 முதல் 150-க்குள்ளே பயணிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் மக்கள் கடும் பீதியில் இருந்ததால், வேறு வழியின்றி அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், சில ஆப்கானியர்கள் அமெரிக்க இராணுவ விமானம் புறப்பட்ட போது, அந்த விமானத்தின் டயர் மற்றும் இறக்கைகள் மீது ஏறி உட்கார்ந்து செல்ல முயன்று மூன்று பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.