கடந்த சில நாட்களுக்கு முன் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மரண செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொகுப்பாளராகவும், நடிகராகவும் சினிமாவில் கலக்கிய இவர் வெளிநாட்டிற்கு சென்று அங்கு வேலைகள் செய்து வந்தார்.
அண்மையில் தமிழில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார்.
சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் தனது மனைவியிடம் தான் இறந்தால் இப்படி செய் என தனது கடைசி ஆசையை கூறியுள்ளார்.
அது என்னவென்றால் நான் இறந்தால் வீட்டிற்கு வருபவர்கள் சிரித்தபடி வர வேண்டும், மேளதாளத்தோடு என்னை தூக்கி செல்ல வேண்டும், கல்யாண வீடு போல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவரது மனைவி நிறைவேற்றியுள்ளார்.



















