தமிழ் சினிமாவின் மிகசிறந்த நடிகர் நெப்போலியன் அவர்கள் அமெரிக்காவில் மிகப்பாரிய ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் என்றால் அனைவரின் ஞாகத்திற்கு வருபவர் தான் நடிகர் நெப்போலியன். அந்த அளவிற்கு தனது உடலமைப்பினையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளவர்.
பின்பு ஹீரோ மற்றும் குணச்சித்ர வேடத்தில் நடித்து ரசிகர்களின் பட்டாளத்தினை அதிகமாக கவர்ந்தவர். அதிலும் தசாவதாரம் படத்தில் இவர் “வாய்ப்பேச்சில் வைனவர்” தான் எனக் கூறும் வசனம் எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தெலுங்கு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் குமரேசன். ஆனால் பாரதிராஜா நெப்போலியனை சினிமாவிற்கு அழைத்து வரும்போது குமரேசன் என்ற பெயரை மாற்றி நெப்போலியன் என்ற பெயர் வைத்துள்ளார்.
நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்ட நெப்போலியன் 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். முக அழகிரியின் விசுவாசியாக இருந்த நெப்போலியன், திமுகவில் இருந்து முக அழகிரி நீக்கப்பட்ட பின் அவரும் திமுகவில் இருந்து சில விலகி பின் பாஜகவில் இனைந்தார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ் மற்றும் குனால் என்ற மகன்களும் உள்ளனர்.
மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளதால், கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தொழில் தொடங்கிய நெப்போலியன், தனது மகன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கும் சூழல் ஏற்படவும் தனது தொழிலை அமெரிக்காவில் தொடங்கினர்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனுக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் வரை வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் இந்த நிறுவனத்தில் பனி புரிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் நெப்போலியன்.
சினிமா துறையில் இருந்து தொழிலதிபராக தங்கள் வாழ்க்கையை மாற்றி கொண்டவர்களில். நடிகர் அரவிந்த்சாமி போன்றவர்கள் சொன்றாலும் பின் தொழில் வீழ்ச்சி காரணமாக மீண்டும் சினிமாவுக்கு வந்தனர், ஆனால் நடிகர் நெப்போலியன் மிக பெரியவெற்றியை தொழில் துறையில் பெற்று தொழில் அதிபராக வலம் வருகிறார்.
மேலும் மூத்த மகனான தனுஷ் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார். அதனால் இதை போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திருநெல்வேலி அருகே உள்ள மருந்துவமனைக்கு உதவிகள் அளித்து வருகிறார் நடிகர் நெப்போலியன். பல வருடங்களாக இவர் செய்து வரும் உதவிக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏனென்றால் தன் மகனைப் போல் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணம் தான் இதற்கு காரணம்.