கொழும்பு நகரில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் சீனாவின் சினோபாம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜய முனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு நகர எல்லைக்குள் இளைஞர்கள், யுவதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் மந்தமான நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நகர எல்லைகளில் உள்ள இளைஞர், யுவதிகளின் எண் ணிக்கை 97,000 என்றாலும், தற்போது வரை மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்கள் மாத்திரமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பைசர் தடுப்பூசி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குப் பாது காப்பானது என்ற அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அவர்கள் உருவாக்கியதே இதற்குக் காரணம் என்றும், எனினும் அதில் உண்மை இல்லை என்றும் மருத்துவ அதிகாரி ருவன் விஜய முனி தெரிவித்துள்ளார்.