முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இன்று தினை, முருங்கை கீரை சேர்த்து சுவையான சத்தான இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 1/2 கப்
உளுத்தம்பருப்பு – 1/2 கப்
தினை – 1/2 கப்
கருப்பு எள் – கால் கப்
காயா வைத்த முருங்கை இலை – அரை கப்
கறிவேப்பிலை – அரை கப்
கட்டி பெருங்காயம் – 5 கிராம்
மிளகாய் வற்றல் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, தினையை தனித்தனியாக போட்டு வறுத்து எடுக்கவும்.
அடுத்து அதில் முருங்கை கீரை, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு வறுத்து எடுக்கவும்.
அடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.
அனைத்து பருப்பு வகைகள் சேர்த்து நன்றாக ஆறவிடவும்.
நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.