குழந்தைகளை எதிர்காலத்தில் அதிக திறன்படைத்தவர்களாக மாற்றுவதற்காக, கோழியின் ரத்தத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தும் ‘சிக்கன் பேரண்டிங்’ எனப்படும் வினோத வளர்ப்பு முறை சீனாவில் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களது பிள்ளைகள் புத்திசாலிகளாக, வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வலம் வர வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அதற்காக எந்த எல்லைக்கும் பெற்றோர்கள் செல்வார்கள்.
அந்த வகையில் சிக்கன் பேரண்டிங் எனப்படும் வினோதப் பழக்கம் ஒன்று சீனாவில் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழியின் இரத்தத்தை ஊசி மூலம் செலுத்துகிறார்கள்.
இது எதிர்காலத்தில் அக்குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருப்பதற்கும், கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருக்கும் என நம்பப்படுவதே ஆகும்.
கோழியின் இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளிடம் உயர் செயல்திறனை அதிகரிக்கச் செய்து அவர்கள் கல்வி, விளையாட்டு என அனைத்திலும் மிக அதிக சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.
சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ போன்ற நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.