தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி ஊரடங்கை எதிர்வரும 21ஆம் திகதி தளர்த்தாது அக்டோபர் மாதம் வரையில் தொடருமாறு விசேட மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ற போதும் இலங்கையில் அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நீக்கப்படுகிறதா அல்லது எதிர்வரும் அக்டோபர் மாதம் வரையில் நீடிக்கப்படுகிறதா அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுகிறதா என்பது தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் இன்னும் சில மணிநேரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.