90-களில் தமிழில் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன், இவர் தற்போது கணவர், குழந்தை என செட்டிலாகிவிட்டார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், அந்த வகையில் பாகுபலி படத்தில் இவரின் ராஜமாதா கதாபாத்திரம் இந்தியளவில் பிரபலமானது.
மேலும் தற்போது ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவி-ல் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார், அந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் பிறந்தநாளை பிரபல நடிகைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் திரிஷா, குஷ்பூ, நகுல், உமா ரியாஸ், ரியாஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.




















