அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பத்தில் படு வேகமாக தொடங்கியது. ஆனால் அந்த வேகம் கொரோனா நோய் தொற்று பிரச்சனையால் அப்படியே குறைந்துவிட்டது.
படத்தின் படப்பிடிப்பு கொரோனாவிற்கு பிறகு தொடங்கவே பல பிரச்சனைகளை சந்தித்தது. அண்மையில் தான் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது என கூறப்பட்டது.
படத்தின் ஃபஸ்ட் லுக், முதல் பாடல் எல்லாம் வெளியாகிவிட்டது, அடுத்து என்ன டீஸர் தான். சமூக வலைதளங்களில் டீஸர் குறித்த பல தகவல்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன.
சிலர் வலிமை பட டீஸர் அடுத்த வாரத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த தகவல் கேட்ட ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.



















