12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விசேட அறிவிப்பு.
12 வயது தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பொரள்ளை றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.