நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் 26 மெதுவோட்ட தடங்களை (ஜாகிங் டிராக்ஸ்) அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜாகிங் டிராக்குகளை நிர்மாணிக்க அரசாங்கம் பட்ஜெட்டில் 2 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் என்.பி.கே ரணவீர செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மெதுவோட்ட தடங்கள் முக்கியமாக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் அல்லது தூசி இல்லாத மற்றும் உடல் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஆரோக்கியமான பகுதிகளில் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இத் திட்டங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்