கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (20) இரவு நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஸ்கந்தபுரம் 2ம் பாடசாலை வீதியில் வசித்துவரும் பேரின்பநாதன் கேசவன் எனும் 27 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சிறிய வியாபார நிலையமொன்றை நடாத்திவரும் குறித்த இளைஞன் நேற்றைய தினம் இரவு பிஸ்கட் எடுத்து வர கடைகள் சென்றபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடைக்கு இணைக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் ஏற்பட்டிருந்த மின்ஒழுக்கு காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் திருமணம் முடித்து குறுகிய காலம் எனவும் மனைவி நிறைமாத கர்ப்பிணி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் இரவுநேர காவலாளியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தரின் சடலம் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.