எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், 2020ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித(Sanath Pujitha) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. குறித்த பரீட்சைக்கு 622,000 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்களின் செய்முறை பரீட்சைகள் இடம்பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடாமல் இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், செய்முறைப் பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து ஏனைய 8 பாடங்களுக்கான பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் சமீபத்தில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன்(Dinesh Gunawardena) கலந்துரையாடல் இடம்பெற்றது.
பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும் பெரும்பாலான மாணவர்கள் தற்போது இணையவழி ஊடாக உயர்தர வகுப்புக்களின் பாடங்களை கற்று வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.