உலகின் எந்தவொரு நாடும் குறிப்பிட்ட ஓர் கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
அனைத்து நாடுகளுமே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட வெளிநாட்டவர்களை அனுமதிப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஏதேனும் ஓர் நாட்டில் குறிப்பிட்ட ஓர் தடுப்பூசியை மட்டும் பயன்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தால் அவ்வறான நாடுகளுக்கு செல்வோருக்கு, நாட்டில் அந்த தடுப்பூசி கையிருப்பில் இருந்தால் அந்த தடுப்பூசிகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு செல்வோர் குறிப்பிட்ட ஓர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்பினால் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.