ஃபைசர் மற்று ம்மொடர்னா கோவிட் -19 தடுப்பூசிகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் உள்ள தடுப்பூசி மையத்தில் இன்று (25) காலை உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் மொடர்னா தடுப்பூசியை எதிர்பார்த்து வந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக களனிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வாவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,
மொடர்னா தடுப்பூசி இன்றும் நாளையும் இராணுவ வைத்தியசாலையில் மாணவர்களுக்கு கிடைக்கும் என்று முன்னரே குறிப்பிடப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் மொடர்னா தடுப்பூசி வழங்கப்படாது என்று நேற்றிரவு இராணுவம் தெரிவித்தது.
இது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க நேற்றிரவு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.