இலங்கையில் 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் பியல் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முதல் கட்டமாக 200 இற்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் முதலாம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டாவது கட்டமாக 200 இற்கும் குறைவான மாணவர்கள் கொண்ட அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் கட்டமாக சாதாரண தரம் மற்றும் உயர் தர மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான்றாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒக்டோபர் மாத இறுதியில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முழுமையான வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்