பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி அன்பினை பரிமாறிக்கொள்ளும் வழக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிரான்ஸ் அரசு தளர்த்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி முத்தமிடுவது வழக்கம்.
இந்நிலையில், கோவிட் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இவ்வாறு அன்பை பரிமாறிக்கொள்ளும் கலாசாரத்தை பொதுமக்களால் தொடர முடியாத வகையில் பிரான்ஸ் அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
பிரான்ஸ் நாட்டில் தற்போது கோவிட் பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,மேலும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளமையினால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.
எங்களுடைய அன்பை வெளிப்படுத்தவும், பாசத்தை உணர்த்தவும் கட்டிப்பிடித்து முத்தமிடுவது எங்களது கலாசாரமாக கொண்டுள்ளோம். ஆனால், இவ்வளவு காலமும் இதற்கு தடை இருந்ததால் மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த கஷ்டம் இப்போது நீங்கி விட்டது. இது எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.