பேஸ்புக் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் கடந்த 28ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ரூ. 200,000 பிணையில் மாணவர் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் சந்தேகநபரை நவம்பர் 02 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார். இரத்மலானையில் வசிக்கும் மருத்துவபீட மூன்றாம் ஆண்டு மாணவர் தொடர்பில் அக்மீமனவில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
திருமணமான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், பெண்ணிற்கும், பல்கலைக்கழக மாணவனிற்குமிடையில் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர்களின் நட்பு காதலாகிய நிலையில் இருவரும் பலமுறை நேரில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளதுடன், வீடியோ அழைப்பு மூலமும் அந்தரங்கமாக தோன்றியபோது, இளம்பெண்ணின் அந்தரங்க காட்சிகளை பல்கலைகழக மாணவன் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து சில காலத்தில் இருவருக்குமிடையில் முரண்பாடு தோன்றியதையடுத்து, பேஸ்புக் காதலனுடனான தொடர்பை பெண் நிறுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவன், அந்தப் பெண்ணின் தகாதபுகைபடங்களை அவரது கணவனிற்கும், சகோதரிக்கும் அனுப்பியதையடுத்து, பெண்ணின் குடும்ப வாழ்க்கை சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.