இலங்கைப்பாடகி யொஹானி சில்வாவின் (Yohani Diloka de Silva) முதலாவது இந்திய இசை நிகழ்ச்சிி நேற்று (30) ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் யொஹானி சில்வாவை காண புது டெல்லி விமான நிலையத்தில் நான்கரை லட்சம் ரசிகர்கள் ஒன்று கூடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவரது முதல் இசை நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு குருகிராம் ஸ்டுடியோ XO இல் நடைபெற்றது. இலங்கையின் ‘லுனு மியூசிக்’ இசைக்குழு பின்னணி இசை வழங்கியது.
இதேவேளை ஆயிரக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கு முன்னால் ஒரு இலங்கை பாடகர் பாடுவது இதுவே முதல் முறையென கூறப்படுகிறது.
மேலும் யொஹானி ஒக்டோபர் 3 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.