நாட்டில் இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 500 பஸ்கள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மாகாணங்களுக்குள் இந்தச் பேருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாரதிகள், நடத்துனர்கள் உட்பட தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றுபவர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டு ஊழியர்களை பணிக்கு அழைக்கவும் தீர்மானக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அத்தியாவசிய சேவை நிமித்தம் வேறு மாகாணங்களில் சேவையாற்றுபவர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்குவதற்கும் போக்குவரத்துச் சபை தயார் நிலையில் உள்ளது.
இதேவேளை, தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேவர்த்தன தெரிவித்தார். மேலும் நாட்டின் தற்போதைய நிலையில் எந்தவொரு கட்டண மறுசீரமைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.