பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தற்போது விஜய் டிவியின் டாப் டிஆர்பி இடம் பிடித்த நாடகம் என்றால் அது பாரதி கண்ணம்மா தான்.
இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் குறிப்பாக அகிலன் கதாபாத்திரத்தில் முன்பு நடித்த நடிகர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத்தொடர்ந்து அவர் அந்த சீரியலிலிருந்து திடீரென விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் “வீரமே வாகை சூடும்” படத்தில் நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் இவரும் நடித்து வரும் காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.